கிட்னி விற்பனை வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்புக்குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் : ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை : கிட்னி விற்பனை வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு சிறப்புக்குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும்; குழுவில் இடம்பெறுபவர்கள் குறித்து தமிழ்நாடு டிஜிபி பிற்பகல் 3 மணிக்கு மேல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் "தமிழ்நாடு முழுவதும் மனித உறுப்புகள் விற்பனை நடைபெறுகிறது; இதில் ஒரு மருத்துவர், ஒரு மருத்துவமனைக்கு மட்டும் தொடர்பு இருக்காது; முழு நெட்வொர்க்கையும் கண்டுபிடிக்க வேண்டும்,"இவ்வாறு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சுப்ரமணியன், அருள்முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement