தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன்படி முதல் கட்டமாக கடந்த 9ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற்றது. முதல் கட்டத்தில் 71 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 2வது கட்ட தேர்தல் திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு, வயநாடு, மலப்புரம், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் கடந்த 11ம் தேதி நடைபெற்றது.

Advertisement

2-ம் கட்டவாக்குப்பதிவில் 75.38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில், கேரள உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி 244 மையங்களில் நடக்கிறது. இதனையொட்டி வாக்குகள் எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. மொத்தமுள்ள 86 நகராட்சிகளில் 48 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

ஆளும் இடதுசாரி கூட்டணி 30 நகராட்சிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் 7-ல் முன்னிலை; இடதுசாரி கூட்டணி 5-ல் முன்னிலையில் உள்ளது. 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் 3, இடதுசாரிகள் 2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. 152 ஊராட்சி ஒன்றியங்களில் காங்கிரஸ் கூட்டணி 69 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 64 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கூட்டணி 2 நகராட்சி, ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கூட்டணி மாநகராட்சி, மாவட்ட பஞ்சாயத்துகளில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

Advertisement