கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Advertisement
இந்த நிலையில், கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ரெட் அலெர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கனமழை காரணமாக திருச்சூர், வயநாடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய இடங்களில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement