கேரளாவில் பாலியல் தொல்லை வழக்கில் ராப் பாடகர் வேடன் விசாரணைக்காக காவல்துறை முன் ஆஜர்..!!
கேரளா: கேரளாவில் பாலியல் தொல்லை வழக்கில் ராப் பாடகர் வேடன் விசாரணைக்காக காவல்துறை முன் இன்று ஆஜரானார். பிரபல ராப் பாடகரான வேடன் (ஹிரன்தாஸ் முரளி) என்பவர் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள குத்தந்திரம் பாடலின் மூலம் மிகவும் பிரபலமானார். அண்மையில் புலி பல் சர்ச்சையில் சிக்கிய இவர், சமீபத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 2021ம் ஆண்டு முதல் 2023 வரையில் தொடர்ச்சியாக பலமுறை பலாத்காரம் செய்த வேடன், தன்னிடம் பணமோசடியும் செய்ததாக வேடன் மீது பெண் மருத்துவர் புகார் அளித்திருந்தார்.
மேலும் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் கொச்சி திருக்காக்கரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் 27, 2025 அன்று விசாரணைக்கு வருகையில், இருவர் சம்மதத்துடன் உறவில் இருந்தது தெரியவந்ததால் வேடனை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து. வேடனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. பின்னர் தொடர்ந்து, செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு நாட்களுக்கு விசாரணை அதிகாரியின் முன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், பாலியல் தொல்லை வழக்கில் ராப் பாடகர் வேடன் விசாரணைக்காக காவல்துறை முன்பு இன்று ஆஜரானார்.