கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் ஓணம் கோலாகலம்: அத்தப்பூ கோலமிட்டு, திருவாதிரை நடனமாடி மாணவர்கள் மகிழ்ச்சி!
கோவை: கேரள எல்லையை ஒட்டிய தமிழ்நாடு பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கேரளாவின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான ஓணம் வரும் 5ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கோவை ஆவாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். கல்லூரி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்ட அவர்கள் திருவாதிரை நடனமாடி, செண்டை மேளம் இசைத்து மகிழந்தனர்.
Advertisement
நாகர்கோவில் அருகே பிள்ளையார்புரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு அத்தப்பூ கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாணவிகள் வண்ண மலர்களால் விதவிதமாக மாவிலி மன்னர் உருவத்தை வடிவமைத்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள தனியார் கல்லூரியிலும் செண்டை மேளம் முழங்க ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
Advertisement