சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம்; உயர் பொறுப்பினரை விசாரிக்க வேண்டும்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத்தகடுகள் மாயமான விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு தனிப்படை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி குற்றப்பிரிவு ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் எஸ்பிக்கள் சுனில்குமார் மற்றும் சசிதரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை தனிப்படை நேற்று கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை திருப்தி அளிப்பதாக தெரிவித்தது. தங்கம் மாயமான விவகாரத்தில் சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தால் அது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், கீழ்மட்டத்தில் உள்ளவர்களை மட்டுமல்லாமல் உயர் பொறுப்பில் இருப்பவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தனிப்படைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.