கேரள உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டின் முன்பு குப்பை வீசிய 2 பேர் கைது
Advertisement
அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பரிசோதித்து குப்பைகளை வீசிச் சென்ற இடுக்கியைச் சேர்ந்த கார்த்திக், காசர்கோட்டை சேர்ந்த சாகுல் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். நிறுவனத்தின் குப்பைகளை வழியில் வீசிவிட்டு சென்று உள்ளனர். ஆனால் அது நீதிபதியின் வீடு என்பது அவர்களுக்குத் தெரியாது என தெரிய வந்தது.
Advertisement