கேரளாவில் இன்றும் மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை
11:01 AM Aug 06, 2025 IST
கோழிக்கோடு: கேரளாவில் இன்றும் மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.கேரளாவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்துவரும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், வயநாடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது.