கேரள முதல்வருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் மனு
புதுடெல்லி: கேரள ஆளுநர் ராஜேந்தர் ஆர்லேகர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
Advertisement
கேரளாவில் உள்ள கேரளா டிஜிட்டல் பல்கலைக்கழகம் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் கேரள மாநில முதல்வர் தலையிடுகிறார். இதனால் பல்கலைக்கழக மானிய குழுவின் நெறிமுறைகளின்படி நடக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எனக்கு எதிரான வழக்கை அவரே விசாரித்து தீர்ப்பு வழங்குவது போல பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் கேரள மாநில முதல்வரின் தலையீடு இருக்கிறது. உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு விசாரணை நடத்தி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement