தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலைக்கு தீ வைப்பு: 300 பேர் மீது வழக்கு!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டக்காரர்கள் திடீரென்று தொழிற்சாலைக்குள் புகுந்து தீ வைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் 300க்கு மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைக்கு தீ அணைக்க வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தியது. அதேபோல் பாதுகாப்புக்கு நின்று இருந்த காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்டபிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Advertisement

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு கோழி இறைச்சியை வெட்டி தரக்கூடிய ஒரு தொழிற்சாலை நிறுவப்பட்டிருந்தது. இந்த தொழிற்சாலை காரணமாக அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்தாண்டு பஞ்சாயத்து சார்பில் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், தொழ்ற்சாலை தொடர்ந்து இயங்கி வருவதை எதிர்த்து. மக்கள் தொடர் போராட்டம் நடத்துவதற்காக தொழிற்சாலை முன்பாக கூடி இருந்தனர். அச்சமயம் மக்கள் தொழிற்சாலைக்கு தீ வைத்ததாகவும் அதை தடுக்க முட்பட்ட காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும். இதை தொடர்ந்து தடியடி சம்பவம் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் காவல்துறையினரும், பொதுமக்களும் எதிர்தரப்பினருமே காயம் அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில், தான் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க வந்த வாகனத்தையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 300க்கு மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவானது செய்யப்பட்டிருக்கிறது.

Advertisement