தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் ஒருவர் பலி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா என்னும் அமீபிக் மூளை காய்ச்சல் என்ற அரியவகை தொற்றால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோழிக்கோடு மருத்துவமனையில் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த 44 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் அமீபா தொற்றால் 11 பேர் அறிகுறிகளுடன் சிகிச்சையில் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே கேரளாவில் அமீபா மூளை காச்சலுக்கு 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மூளையை உண்ணும் அமீபா, அறிவியல் ரீதியாக ‘Naegleria fowleri’ என அழைக்கப்படுகிறது. இது முதன்முதலில் 1960களில் ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டது. இது ஒற்றை செல் உயிரினம் ஆகும். சூடான நன்னீர் நிலைகளில், குறிப்பாக ஏரிகள், ஆறுகள், குளங்கள் மற்றும் மோசமாகப் பராமரிக்கப்படும் நீச்சல் குளங்களில் வாழ்கிறது.கேரளாவில் ஆண்டுக்கு ஆண்டு இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுவரை திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 18 பேருக்கு மூளையை தின்னும் அமீபா பாதிப்பு கடந்த சில நாட்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் கேரளாவில் இதுவரை 41 பேருக்கு அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த தொற்று பெரும்பாலும் குழந்தைகளையும் இளைஞர்களையும் பாதிக்கிறது.

Advertisement

Related News