கேரளாவில் பரவும் அமீபா தொற்று: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள நீச்சல் குளத்தில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு
சென்னை: கேரளாவில் பரவும் அமீபா தொற்று காரணமாக தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள நீச்சல் குளத்தில் ஆய்வு மேற்கொள்ள தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் பரவும் அமீபா தொற்றுக்கு மூன்று மாத குழந்தை உட்பட இரண்டு பேர் பலியான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீச்சல் குளத்தில் ஆய்வு மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதில்,
*தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள நீச்சல் குளத்தில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார்.
*நீச்சல் குளத்தில்" நாளொன்றுக்கு 2 முறை தண்ணீரை வெளியேற்றிவிட்டு குளோரின் பவுடர் தெளிக்க அறிவுறுத்தல்.
*நீச்சல் குளம் உரிமையாளர்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவு.
*மாசடைந்த நீர் நிலைகளை குழந்தைகள் அணுகாமல் பெற்றோர் பாதுகாத்துக் கொள்ள அறிவுறுத்தல்.
*நீச்சல் குளத்தில் நாளொன்றுக்கு 2 முறை தண்ணீரை வெளியேற்றி குளோரின் பவுடர் தெளித்து, சானிடைஸ் செய்ய வேண்டும்