சிறுமி துன்புறுத்தல்: கேரள நடிகை மினு முனிர் கைது
சென்னை: 14 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் கேரள நடிகை மினு முனிர் கைது செய்யப்பட்டுள்ளார். மினு முனீர் தனது உறவினர் மகளான 14 வயது சிறுமியை நடிப்பதற்காக கேரளாவில் இருந்து சென்னை அழைத்து வந்துள்ளார். சென்னையில் தனியார் விடுதியில் சிறுமியை தங்க வைத்தபோது 4 பேர் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. 4 பேரிடம் இருந்து சிறுமி தப்பித்து கேரளா சென்ற நிலையில் கடந்த மார்ச்சில் மினு முனிர் மீது புகார் அளித்தார். புகார் அடிப்படையில் கேரளா காவல்துறை வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நப்பிடத்தி வந்தது. கேரளாவில் நடிகை மினு முனிரை கைதுசெய்து தமிழ்நாடு போலீஸ் சென்னை அழைத்து வந்தது.