கேந்திரிய வித்யாலயா,நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 14,967பணியிடங்கள்
பணியிடங்கள்:
1. கேந்திரிய வித்யாலயா: 9126 இடங்கள். (அசிஸ்டென்ட் கமிஷனர்-8, முதல்வர்- 134, துணை முதல்வர்-58, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்- 1465, பட்டதாரி ஆசிரியர்கள்- 2794, நூலகர்-147, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்-3365, ஆசிரியரல்லாத பணிகள்-1155.).
2. நவோதயா வித்யாலயா: 5841 இடங்கள். (முதல்வர்-93, உதவி கமிஷனர்-9, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்-1513, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் (நவீன இந்திய மொழி)- 18, பட்டதாரி ஆசிரியர்கள்-2978, பட்டதாரி ஆசிரியர்கள் (மூன்றாவது மொழி)-443, ஆசிரியரல்லாத பணிகள்-787).
கல்வித் தகுதி:
1. முதல்வர்/துணை முதல்வர் பணிக்கு: ஏதாவதொரு பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்து பி.எட்., பட்டம் பெற்று, முதல்வர் பணிக்கு துணை முதல்வராக 3 வருட பணி அனுபவமும், துணை முதல்வர் பணிக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியராக 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
2. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர்: இந்தி/ஆங்கிலம்/இயற்பியல்/வேதியியல்/கணிதம்/உயிரியல்/வரலாறு/ புவியியல்/பொது அறிவியல்/உடற்கல்வி ஆகிய பாடப் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
அ. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு: மேலே கொடுக்கப்பட்டுள்ள பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று பி.எட்., படித்திருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று பி.எட்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆ. தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆசிரியர் பயிற்சிக்கான டிப்ளமோ படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சிபிஎஸ்இ யால் நடத்தப்படும் போட்டித் தேர்விலும் வெற்றி பெற வேண்டும். ஆசிரியரல்லாத பணிகளுக்குரிய கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் பற்றிய விவரங்களை இணையதளத்தில் பார்க்கவும்.
வயது: முதல்வர் பணிக்கு 35 வயது முதல் 50க்குள்ளும், துணை முதல்வர் பணிக்கு 35 வயது முதல் 45க்குள்ளும், தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு 35 வயதுக்குள்ளும், முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கு 40க்குள்ளும், ஆசிரியரல்லாத பணிகளுக்கு 30 முதல் 35க்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: முதல்வர்/துணை முதல்வர் பணிக்கு ரூ.2,800/-. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ரூ.2,000/-. ஆசிரியரல்லாதோர் பணிக்கு ரூ.1700/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
சிபிஎஸ்இ யால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படும்.தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, நாகர்கோவில், திருச்சி, சேலம் ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.www.kvsangathan.nic.in அல்லது www.cbse.gov.in என்ற இணையதளங்கள் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 04.12.2025.