மதுபான கொள்கை வழக்கு விவகாரத்தில் கெஜ்ரிவால் புதிய மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Advertisement
இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் கே.வி.விஸ்நாதன் ஆகியோர் முன்னிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி நேற்று ஒரு முறையீட்டை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த புதிய இடைக்கால மனுவை பட்டியலிடுவது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தான் முடிவெடுக்க வேண்டும். நீங்கள் அவரிடம் தான் சென்று முறையிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Advertisement