கீவே ஆர்ஆர் 300
மோட்டோ வால்ட் நிறுவனம், கீவே ஆர்ஆர் 300 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 292 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8,750 ஆர்பிஎம்-ல் 27 எச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்-ல் 25 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளது.
அதிகபட்சமாக மணிக்கு 139 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். ஷோரூம் விலை சுமார் ரூ.1.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.