பாலியல் வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டு சிறை
03:18 PM Aug 13, 2025 IST
சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது. கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கராத்தே மாஸ்டர் கெபிராஜூக்கு ரூ.50,000 அபராதம் விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2021ல் பதிவான வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.