கஜகஸ்தான்-இந்தியா கால்பந்து போட்டி டிரா
Advertisement
ஷிம்கென்ட்: வரும் 2026 ஏப்ரலில் ஏஎப்சி யு20 மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கு தயாராகும் வகையில், 20 வயதுக்கு உட்பட்ட வீராங்கனைகள் அடங்கிய இந்தியா யு20 மகளிர் அணியும், கஜகஸ்தான் அணியும், கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் உள்ள விளையாட்டு அரங்கில் நட்பு ரீதியில் இரு கால்பந்தாட்ட போட்டிகளில் ஆடின. கடந்த 25ம் தேதி நடந்த முதல் போட்டியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் நேற்று நடந்த 2வது நட்பு ரீதியிலான போட்டியில் கஜகஸ்தான் - இந்தியா அணிகள் தலா ஒரு கோல் மட்டுமே போட்டதால் அப்போட்டி டிராவில் முடிந்தது.
Advertisement