காவாசாக்கி இசட்1100
காவாசாக்கி நிறுவனம் புதிய இசட் 1100 மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் நிஞ்சா 1100 எஸ்எக்ஸ்-ல் உள்ள 1,099 சிசி இன்லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 136 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 அங்குல வண்ண டிஎப்டி டிஸ்பிளே, புளூடூத் இணைப்பு, நேவிகேஷன் வசதி, 2 பவர் மோட்கள், 3 லெவல் டிராக்ஷன் கன்ட்ரோல், இருபுறமும் இயக்கக்கூடிய குயிக் ஷிப்டர், குரூஸ் கண்ட்ரோல், டூயல் சானல் ஏபிஎஸ் உட்பட பல அம்சங்கள் இதில் உள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.12.79 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் ஹோண்டா சிபி1,000 ஹார்னெட் எஸ்பிக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement