கருவாட்டுடன் மீனவ பெண்கள் போராட்டம்
ராமேஸ்வரம்: இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளதால், தமிழகத்தில் இருந்து அந்நாட்டுக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட 500 டன் கடல் உணவு நடுவழியில் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கடல் உணவு பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிப்பு செய்யும், அமெரிக்க அரசைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவ தொழிலாளர் சங்கம் சார்பில் தபால் நிலையம் முன் நூதன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மீனவத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் செந்தில்வேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கருவாடுகளை கையில் ஏந்தி அமெரிக்காவிற்கு எதிராக கண்டன கோஷமிட்டனர்.
Advertisement
Advertisement