கரூரில் விஜய் பரப்புரையின்போது 41 பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
மதுரை: கரூரில் விஜய் பரப்புரையின்போது 41 பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. சிபிஐ விசாரணை கோரி பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உள்ளிட்டோர் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. கரூர் போலீசார் நடத்தி வரும் விசாரணை தொடக்க நிலையில் உள்ளபோது, சிபிஐ விசாரணை கோருவதா? என நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement