தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் நெரிசலில் 41 பேர் பலியானதற்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

* மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவது கூட்டாட்சிக்கு எதிரானது

Advertisement

* சிறந்த அதிகாரியின் தலைமையில் நடைபெறும் எஸ்ஐடி விசாரணையே தொடரலாம்

புதுடெல்லி: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானதற்கு நடிகர் விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே காரணம் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இது தொடர்பான வழக்கை சிறந்த ஐபிஎஸ் அதிகாரியான அஸ்ரா கார்க் தலைமையிலான எஸ்ஐடியே தொடரலாம் என்றும், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவது கூட்டாட்சிக்கு எதிரானது என்றும் தமிழக அரசு வக்கீல் வாதிட்டார். கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி ‘தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யின் பிரசாரம் நடைபெற்றது.

இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது பற்றி விசாரிக்க போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவை(எஸ்ஐடி) அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ-யிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஐந்து மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. மேற்கண்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி மற்றும் என்.வி அஞ்சார்யா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று வந்தது.

அப்போது தமிழக வெற்றி கழகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், ‘‘பிரச்சாரத்திற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பின்னரே அன்று பிரசாரம் நடைபெற்றதாகவும், ஆனால் இந்த விவகாரத்தில் வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத (விஜயை) ஒருவரை சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாக விமர்சித்து இருக்கிறது. மேலும் பல்வேறு கருத்துக்களை விஜய் மீது கூறியிருப்பதாக வாதங்களை முன்வைத்தனர். அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணை வரம்பிற்கு உட்பட்டது என்றால், சென்னையில் இருக்கக்கூடிய பிரதான கிளையில் எப்படி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பினர்.

இதை எடுத்து அப்போது மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், ‘‘உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடைய அனுமதி பெற்று இதுபோன்ற வழக்கை விசாரணை வரம்புக்குள் எடுக்க முடியும். ஆனால் இந்த விவகாரத்தில் அவ்வாறு எந்த ஒரு அனுமதியும் பெற்றதாக தகவல் இல்லை! என தெரிவித்தார். இதை தொடர்ந்து தவெக தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியன்,‘‘இந்த விவகாரத்தை பொறுத்தவரை விஜய் அந்த சம்பவம் நடைபெற்ற உடனே அங்கிருந்து தப்பித்து சென்றதாக அரசு வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது வாதமாக தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆனால், உயிரிழப்பு சம்பவம் நடந்தவுடன் தமிழக காவல்துறையினரே கரூரிலிருந்து விஜயை புறப்படுமாறு கூறினார்கள். கரூர் விவகாரம் தொடர்பாக விசாரிக்க தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது. ஆனால் அந்த விசாரணை மீது நம்பிக்கை குறைவாகவே உள்ளது. “உண்மையை வெளியே கொண்டு வர வேண்டுமென்றால் உச்சநீதிமன்றம் ஒரு சிறப்பு விசாரணை குழுவை ஏற்படுத்த வேண்டும்” என வாதிட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகளை கவனத்தில் எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் தொடர்பாக பிரசாரம் மேற்கொள்வது மற்றும் சாலை பேரணிகள் நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்கள் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு எப்படி கிரிமினல் மனுவாக பதியப்பட்டது?

என கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், உயிரிழப்பு தொடர்பான விவகாரம் என்பதால் வழக்கு கிரிமினல் வழக்காக உள்ளது என கருதி சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அதை உரிய நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிட்டார் என தெரிவித்தனர். அப்போது சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து எப்படி சிறப்பு விசாரணை குழுவின் விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்தது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீண்டும் கேள்வி எழுப்பினர்?. அதற்கு 41 உயிரிழப்புகள் நிகழ்ந்தது என்பதால் தான் நீதிமன்றம் இதனை கையில் எடுத்து உத்தரவை பிறப்பித்து இருக்கிறது என தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருக்கக் கூடிய பல்வேறு தரப்பும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அடுத்தடுத்து வாதங்களை முன்வைத்த நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் ‘சென்னை உயர்நீதிமன்றம் அமைத்திருக்கக்கூடிய சிறப்பு விசாரணை குழுவை தலைமை தாங்குபவர் ஒரு சிறந்த அதிகாரி என்றும், சிபிஐ-யில் ஏற்கனவே அவர் பணியாற்றியுள்ள நிலையில் அந்த அதிகாரியை தமிழக அரசு பரிந்துரைக்க வில்லை மாறாக நீதிமன்றமே அவருடைய திறமையை பார்த்து இந்த சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது.

மேலும் கரூர் சம்பவத்தை பொறுத்தவரை தவெக தலைவர் விஜய் 12 மணிக்கு வருவதாக கூறிவிட்டு மிக தாமதமாக இரவு 7 மணிக்கு வந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது. இதில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் 146 பேர் காயமடைந்தனர் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து செப்டம்பர் 27ம் தேதி கரூரில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், விசாரணை ஆணையத்தின் மீதும் சிறப்பு விசாரணை குழு மீதும் தனக்கு நம்பிக்கை இல்லை! அதனாலே இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே முழு உண்மை வெளிவரும் என கேட்டுக்கொண்டார்.

இதை அடுத்து தமிழ்நாடு அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி,‘‘உயிரிழந்த சிறுவனின் தந்தையின் வலிகளை புரிந்து கொள்வதாகவும், உயிரிழந்த சிறுவனின் தந்தை பாதிக்கப்பட்டுள்ளார் என்ற ஒரு காரணத்தினை அடிப்படையாக கொண்டு மட்டும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற அனுமதிக்க கூடாது என கேட்டு கொண்டனர். ஏனெனில் கள நிலவரங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் தமிழக அதிகாரிகள் என்பதால் ஒரு சிறந்த அதிகாரியின் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த சிறப்பு விசாரணை குழுவில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மேலும் அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு அனுப்பக் கூடாது, அரிதிலும் அரிதான முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மட்டுமே சிபிஐ விசாரணைக்கு சூழலுக்கு ஏற்ப பரிந்துரைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன தீர்ப்பு உள்ளது. மாநில அரசின் ஒப்புதலின்றி சிபிஐக்கு வழக்கை மாற்றுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மேலும் உயிரிழந்த சிறுவனின் தந்தை உயர்நீதிமன்றத்தை அணுகவில்லை! வேறுநபர் தொடர்ந்த வழக்கில் தான் இந்த உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் வாதங்களை முன்வைத்தனர்.

தொடர்ந்து பிற மனு தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குண்டர்கள் கூட்டத்தில் நுழைந்ததாலும், காவல்துறை தடியடி நடத்தப்பட்டதால் தான் இந்த விபத்து ஏற்பட்டது என வாதிட்டனர். இறந்தவர்களின் உடல்களை அவசர அவசரமாக ஒரே இரவில் உடற்கூராய்வு செய்ததாக வாதங்களை முன் வைத்தார்கள். அதற்கு நீதிபதிகள் ‘‘மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு அனுமதியுடன் உடற்கூராய்வு இரவு நேரத்தில் நடத்தலாம்” என விளக்கம் அளித்தனர். தொடர்ந்து வாதிட்ட தவெக தரப்பு வழக்கறிஞர், கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஜனவரி மாதம் அதிமுக கட்சி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டபோது, காவல்துறை அனுமதிக்க வில்லை. ஆனால் எப்படி தமிழக வெற்றி கழகத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது? எனவே இந்த விவகாரத்தை பொறுத்தவரை காவல்துறையின் முழு தோல்வி இந்த விபத்திற்கு காரணம் என்பதை உணர்த்துவதாக வாதிட்டனர்.

தொடர்ந்து தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வில்சன், சேலத்தில் ஒரு மாநாட்டிற்காக வந்திருந்த 200 மருத்துவர்கள் கரூர் அழைத்துவரப்பட்டு உடற்கூராய்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், பல்வேறு மருத்துவமனைகளில் இந்த உடற்கூராய்வு பணிகள் நடைபெற்றதாகவும் தெரிவித்தார். மேலும் இரவு நேரத்திலேயே உடற்கூராய்வு நடத்துவதற்கான காரணம், உயிரிழந்தோரின் குடும்பத்தினர் அரசிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்ததன் அடிப்படையிலே நடந்தது என கூறினர். மேலும், பாதுகாப்பு குறைபாடு என்று பல தரப்பும் வாதங்களை முன் வைத்தாலும் செப்டம்பர் 27 அன்று வேலுச்சாமிபுரத்தில் 600 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என தெரிவித்தார்.

நண்பகல் 12 மணிக்கு வர வேண்டிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், இரவு 7 மணிக்கு வந்திருக்கிறார். இதனால் காலை முதலே திரண்டு இருந்த கூட்டத்திற்குள் தண்ணீர், உணவு எதுவும் கிடைக்காமல் பலர் சோர்வடைந்து மயக்க நிலையை அடைந்தார்கள் என வாதிட்டார். தொடர்ந்து தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த விவகாரம் தொடர்பாக “உரிய ஆதாரங்களோடு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்” என கூறியதையடுத்து, அரசு தரப்பு விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனுமதி வழங்கியதோடு பிரமாண பத்திரங்களை பார்த்த பிறகு இவ்வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

* தவெக தலைவர் விஜய் நண்பகல் 12 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

* காலை முதலே திரண்ட கூட்டத்திற்குள் தண்ணீர், உணவு எதுவும் கிடைக்காமல் பலர் மயக்க நிலையை அடைந்தார்கள்.

* ஆனால், மிக தாமதமாக இரவு 7 மணிக்கு விஜய் வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம்.

Advertisement