கரூர் சம்பவம் : எஃப்.ஐ.ஆரில் விஜய் பெயர் ஏன் இல்லை? - சீமான் கேள்வி
நெல்லை: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான எஃப்.ஐ.ஆரில் விஜய் பெயர் ஏன் இல்லை? - சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்; கரூருக்கு வந்தவர்கள் விஜயை பார்க்க வந்தவர்கள்தானே, அப்படியெனில் பிரச்னைக்கு யார் காரணம்? - சீமான்கரூரில் 41 பேர் உயிரிழந்த குற்றத்திற்கு முதன்மை காரணம் விஜய்தான். தவறு இல்லை என்றால் ஏன் முன்ஜாமீன் கேட்கிறார்கள்?. குற்றத்திற்கு காரணமான வரையே சிபிஐ விசாரிக்காது எனில் பிறகு எப்படி நியாயம் வெளிவரும்?
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான எஃப்.ஐ.ஆரில் விஜய் பெயர் ஏன் இல்லை? யாரைப் பார்க்க கூட்டம் கூடியதோ அந்த நபர் மீது சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு செய்யாதது ஏன்? விஜய் கரூருக்கு வந்ததால்தான் கூட்டம் சேர்ந்தது; கூட்டத்துக்கும் அவருக்கும் சம்பந்தம் இருக்கா? இல்லையா? முதல் தகவல் அறிக்கையில் விஜய், ஆதவ் அர்ஜூனா பெயர்கள் இல்லை. கூட்ட நெரிசலுக்கு காரணமானவர்களை விசாரிக்கவில்லை என்றால் விசாரணை எப்படி இருக்கும்? எஃப்.ஐ.ஆரில் விஜயின் பெயரை சேர்க்காமல் இருப்பது கூட்டணிக்காகத்தான். கூட்டணிக்கு வர மறுத்தால் உடனடியாக விஜய் மீது வழக்கு பதிவு செய்வார்கள்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணையில் இருக்கும்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தனிமையில் சந்தித்து பேசியது ஏன்?. ரூ.20 லட்சம் பணம் கொடுத்துவிட்டு நேரில் சந்தித்து பேசினால் உண்மை எப்படி வெளியே வரும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.