தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூரில் வரும் 17ம் தேதி நடக்கிறது திமுக முப்பெரும் விழா: கனிமொழி உள்ளிட்ட 6 பேருக்கு விருது அறிவிப்பு

சென்னை: கரூரில் வருகிற 17ம் தேதி திமுக முப்பெரும் விழா நடக்கிறது. இதில் கனிமொழி எம்பி உள்ளிட்ட 6 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தொடக்க நாள் ஆகியவை முப்பெரும் விழாவாக கோலாகலமாக கொண்டாடாப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த மாதம் 17ம் தேதி திமுக முப்பெரும் விழா கரூரில் நடக்கிறது.

Advertisement

விழாவையொட்டி, ஆண்டுதோறும் வழங்கப்படுகிற விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: 2025ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள் கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகிற விருதுகளான பெரியார் விருது திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழிக்கு வழங்கப்படுகிறது.

அண்ணா விருது- தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினரும், பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவருமான சுப.சீத்தாராமன், கலைஞர் விருது- நூற்றாண்டு கண்டவரும், அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளரும், அண்ணா நகர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான சோ.மா.ராமச்சந்திரன், பாவேந்தர் விருது- திமுக மூத்த முன்னோடியும், தலைமைச் செயற்குழு உறுப்பினரும்,

குளித்தலை ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான குளித்தலை சிவராமன், பேராசிரியர் விருது- திமுக ஆதிதிராவிடர் நலக்குழு தலைவரும், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், சட்டப்பேரவை முன்னாள் கொறடாவுமான மருதூர் ராமலிங்கம், மு.க.ஸ்டாலின் விருது-ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News