கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சென்னைக்கு வரவைத்து பார்ப்பது கட்சி தலைவருக்கு அழகு அல்ல: வேல்முருகன் எம்எல்ஏ பேட்டி
கடலூர்: கடலூரில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். நாங்கள் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகின்ற பாசிச பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் இடம் பெற மாட்டோம். அதில் அமைகின்ற கூட்டணியில் நாங்கள் இடம் பெற மாட்டோம். நாங்கள் இப்போது இடதுசாரிகள் உள்ளடக்கிய சமூக நீதிப் பேசுகின்ற இயக்கங்கள் இருக்க கூடிய திமுக கூட்டணியில் இருக்கிறோம்.
ஒரு அரசியல் புரிதல் இல்லாமல் தனக்கான தலைவர்களை திரையரங்குகளில் தேடுகின்ற மோசமான ஒரு சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது. இது நிச்சயமாக தமிழ்நாட்டிற்கு ஆரோக்கியமான அறிவு சார்ந்த சமூக நீதி அரசியலுக்கு சமத்துவ அரசியலுக்கு ஏற்புடையதல்ல. கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை வரவழைத்து சந்திப்பு என்பது ஒரு கட்சித் தலைவருக்கும், கட்சி தலைமைக்கும் நல்ல அணுகுமுறை அல்ல. பாதிக்கப்பட்ட மக்களை சென்னைக்கு வரவைத்து பார்ப்பது ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு அழகு அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.