கரூர் மாவட்டத்தில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த சம்பவம் நம்மை எல்லாருக்கும் மனவேதனை அளித்துள்ளது: கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா பேட்டி
சென்னை: செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த சம்பவம் நம்மை எல்லாருக்கும் மனவேதனை அளித்துள்ளது. அந்த சம்பவம் சம்பந்தமாக சமூக வலைதளங்களில் சில தவறான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. அந்த சந்தேகங்களுக்கும், சமூக வலைதளங்களில் பரவி வரும் மற்ற விஷயங்களுக்கும் நிர்வாக ரீதியாக என்னவெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தெரியப்படுத்துவதற்காக இந்த பத்திரிகையாளர் சந்திப்பு.
முதலில் ஒரு காணொலிக் காட்சி மூலமாக என்னென்ன நடந்தது எல்லாம் முதலில் உங்களுக்கு காண்பிக்கிறோம். அதன் பிறகு என்னென்ன கேள்விகள் எல்லாம் சமூக வளைதளங்களில் வருகிறது. அதற்கு என்னென்ன பதில் இருக்கிறது என்பதை உள்துறைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர், DG மற்றும் ADG ஆகியோர் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அந்த கேள்விக்கான விளக்கங்களை தர இருக்கிறோம்.
முதலில் வழங்கப்பட்ட இடம் வேலுசாமிபுரம் இந்த இடத்தை அதாவது, காவல்துறை ஒதுக்கியிருந்தார்கள். அவர்கள் கடிதம் வழங்கியபோது, 7 இடங்கள் தாருங்கள் -27ந்தேதி ஒரு கூட்டம் இருக்கிறது என்று வேண்டுதல் வழங்கி இருந்தார்கள். காவல்துறையும், அவர்களும் கலந்தாலோசனை செய்த பிறகு 25-ஆம் தேதி ஒரு இடம் வழங்கியிருந்தார்கள். 25-ஆம் தேதி இதே வேலுசாமிபுரத்தில் ஏற்கனவே ஒரு கூட்டம் நடத்தியிருந்ததால், அந்த இடத்தில் எந்தவித சிரமமின்றி, 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் பேர் அளவுக்கு கஷ்டப்படாமல் அந்த கூட்டம் நடைபெற்றது என்று அவர்கள் 26-ஆம் தேதி அந்த இடம் தாருங்கள் என்று கடிதம் அளித்திருந்தார்கள்.
அந்த கட்சி சார்பாக காவல்துறைக்கு 26-ஆம் தேதி அந்த இடம் கொடுங்கள் என்று சொல்லியிருந்தார்கள். அங்கு கரூர் லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் பாரத் பெட்ரோலியம் பங்க் உள்ள இடம் அருகிலேயே வடிகால் கால்வாய் உள்ளதால் பாதுகாப்பு காரணம் கருதி அனுமதி வழங்கவில்லை.
அடுத்த இடம் உழவர் சந்தை வேண்டும் என்று அளித்திருந்தார்கள். இடம் 30-40 அகலத்திற்குள் இருக்கும் 60 அடிக்கு அகலம் இருக்கும் இரண்டு பக்கம் போகக்கூடிய வாய்ப்பு உள்ளதால் இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
கேள்வி பதில்
கேள்வி தமிழக உளவுத்துறையால் எத்தனை பேர் வருவார்கள் என முன்கூட்டியே கணிக்க முடியவில்லையா?
அமுதா, அவர்களின் பதில் அவர்கள்: கடிதத்தின் பத்தாயிரம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்ற வேண்டுதல் வைத்திருந்தார்கள். ஏற்கனவே அந்தக் கட்சித் தலைவர் ஏற்கனவே நடத்திய திருச்சி, நாகப்பட்டின ஆகிய கூட்டத்தில் வந்திருந்த கூட்டத்தை வைத்து ஒரு 20 ஆயிரம் பேர் வரைக்கும் வருவார்கள் என்று கணித்திருந்தார்கள்
50 பேருக்கு 1 காவலர் என்ற நிலையான விகிதம் (standard ratio) இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு 20 பேருக்கு 1 காவலர் என்ற விகிதத்தில் வழங்கியிருக்கிறார்கள். ஆனால், அங்கு 3 4 மணிக்கு மேல் கூட்டம் அலைமோத ஆரம்பித்திருக்கிறது. 20000 பேர் 6 மணிக்கு மேல் இருக்கிறார்கள். கட்சித் தலைவர் வரும்போது வண்டியுடன் கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே இங்கே கூட்டம் இருக்கிறது. அதனால், 20000 பேருக்கு மேல் 25000 பேர் கூட்டத்தில் வந்திருந்திருக்கிறார்கள்.
கேள்வி பரப்புரையின் போது மின்சாரம் நிறுத்தப்பட்டது என்ற செய்தி அமுதா, பதில் ADGP செய்தியாளர்கள் கூட்டத்தில், இதற்கான விளக்கம் CEO. TANGEDCO அளித்திருந்தார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் பேசிக் கொண்டிருக்கும்போது மின்சார தடை ஏற்பட்டுள்ளது என்பது திட்டவட்டமாக மறுக்கப்படுகிறது. இதனால், மின்சாரம் தடை செய்யப்படவில்லை என்று CEO அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
கேள்வி -காவலர்கள் தடியடி நடத்தியதால் தான் இது நடந்ததா?
அமுதா பதில்: கூட்டம் ஏற்கனவே அதிகமாக இருந்திருக்கிறது. கட்சித் தலைவர் வரும்போது கூட்டம் சேர்ந்து அதிகமானதால் வண்டி நகர்ந்து செல்ல முடியாமல் போகிறது. அதனால், போலீஸ் சிறிது விலக்கிவிட்டிருக்கிறார்கள். ADGP அந்த தலைவர் பேசிக் கொண்டிருக்கும் வண்டிக்கு முன்னால் pressure அதிகமாகி வந்தது
பின்னால் வந்த கூட்டம், முன்னால் வந்த கூட்டம் வந்தவுடன் DSP அழைத்து நிறுத்த சொல்லியிருந்தார். இதற்கு மேல் போகவேண்டாம் என்று சொல்லியிருந்தார். அதை அந்த organisers ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து செல்ல ஆரம்பித்தது என்று கூறினார்.
பரப்புரை துவங்குவதற்கு முன்பே நெரிசல் சம்பவம் நடந்ததா?
அமுதா, அவர்களின் பதில்: 12 மணிக்கு வரவேண்டும் 3 மணிக்கு மேல் கூட்டம் அதிகமாகிக் கொண்டே வந்து கொண்டிருக்கிறது அதுபோக மக்கள் காலையிலிருந்து காத்துக் கொண்டிருந்திருக்கின்றனர் அவர்களுக்கு நீர்சத்து குறைவு, தண்ணீர் கிடைக்கவில்லை அதனால், நிறையே பேர் களைப்பு ஏற்பட்டு கீழே உட்கார ஆரம்பித்திருக்கின்றனர். அதுபோக, அவர் வைத்திருக்கின்ற ஒரு பெரிய வண்டியாக இருந்ததால், பக்கத்தில் உள்ள கூட்டம் இடம் பெயர்ந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது - அப்போதுதான் மக்கள் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
கேள்வி பரப்புரை கூட்டத்தின்போது எதற்காக ஆம்புலன்ஸ் அடிக்கடி வந்தன?
சுகாதாரத் துறை செயலாளரின் பதில் 7.14 நிமிடத்திற்கு முதல் அழைப்பு வந்தது. அங்கு 7.20 நிமிடத்திற்கு ஆம்புலன்ஸ் சென்றிருக்கிறது. 2-வது அழைப்பு 7.15 நிமிடத்திற்கு வந்தது. அங்கு 7.23 நிமிடத்திற்கு ஆம்புலன்ஸ் சென்றிருக்கிறது. 108-ல் உடனடியாக 6 ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டது
எந்த கூட்டத்திற்கும் அமைப்பாளர்களுக்கு (organisers) என்று ஒரு சில நிபந்தனைகள் இருக்கிறது. பெரிய கூட்டத்திற்கு 10,000-க்கு மேல் வருகிறார்கள் என்று சொன்னால் அமைப்பாளர்களே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்திருந்தார்கள். 2 ஆம்புலன்ஸ் கட்சித் தலைவர் வண்டிக்கு பின்னாலேயே வந்து கொண்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், கட்சிக் காரர்களே 5 ஆம்லன்ஸ் ஏற்பாடு செய்திருந்தார்கள். மொத்தம் 7 ஆம்புலன்ஸ் கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். சுகாதாரச் செயலாளர் கூறியபடி, 6 108 ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தெரிந்த பிறகு தான் கூடுதலாக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த தகவல் எப்படி தெரிந்தது என்றால், காவலர்கள் ஃபோன் வேலை செய்யவில்லை என்றவுடன் வயர்லெஸ் மூலமாக தகவல் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். அதன் பிறகு அரசாங்க வழியாக 108 ஆம்புலன்ஸ் வந்திருக்கிறது. மேலும், கட்சிக்காரர்கள் ஆம்புலன்ஸ் அருகில் இருந்தபடியால் முதலில் வந்திருக்கிறது. 9.45 மணிக்கு தனியார் ஆம்புலன்ஸ் வைத்து உடனடியாக மக்களை அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்