கரூர் துயரம்.. பலமுறை எச்சரித்தும், அறிவுரை வழங்கியும் தவெக நிர்வாகிகள் அதனை கேட்கவில்லை: எப்.ஐ.ஆரில் தகவல்!!
கரூர்: நாமக்கல்லில் வேண்டுமென்றே விஜய் வருகை காலதாமதம் செய்யப்பட்டதாக போலீஸ் எப்.ஐ.ஆரில் தகவல் தெரிவித்துள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், நாமக்கல் டவுன் காவல் நிலைய FIRல் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.
1. நாமக்கல்லில் வேண்டுமென்றே விஜய் வருகை தாமதம் செய்யப்பட்டது. அதனாலேயே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதியது.
2. காலதாமதம் காரணமாகவே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதியது.
3. பல இடங்களில் நிபந்தனைகள் மீறப்பட்டதை தவெக நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை.
4. மெயின் ரோடு வழியாக காலதாமதமாக வந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தி நிபந்தனையை மீறினர்.
5. பலமுறை எச்சரித்தும், அறிவுரை வழங்கியும் தவெக நிர்வாகிகள், காவல்துறை சொன்னதை கேட்கவில்லை.
6. உயிர்ச் சேதம் ஏற்படும் என தவெக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட செயலாளர் சதீஷை எச்சரித்தோம்
7. அசாதாரண சூழல் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் மூச்சு திணறல், கொடுங்காயம், உயிர்ச்சேதம் ஏற்படும் என எச்சரித்தோம்
8. நாமக்கல்லில் காத்திருந்த பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
9. மக்கள் கூட்டத்தை அதிகப்படுத்தி அரசியல் பலத்தை காட்டும் நோக்குடன் விஜய் வருகை 4 மணி நேரம் தாமதம் செய்தனர்.
10. மருத்துவமனை பெயர் பலகையில் ஏறி தொண்டர்கள் சரிந்து மக்கள் மீது விழுந்ததால் அசாதாரண சூழல் நிலவியது.
11. பல மணி நேரம் காத்திருந்ததால் தொண்டர்கள், மக்கள் வெயில் மற்றும் தாகத்தால் சோர்வடைந்தனர்.
12. போதிய தண்ணீர், மருத்துவ வசதியின்றி, அதிக கூட்டத்தால் ஏற்பட்ட அழுத்தம் மக்கள் சோர்வடைந்தனர்.