தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிப்பு!!

சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தொடர் வருகிற வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூடியதும், மறைந்த 8 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது.

Advertisement

அதன் தொடர்ச்சியாக கரூரில் நடந்த துயர சம்பவம், மறைந்த முன்னாள் கேரள முதல்வர் அச்சுதானந்தன், முன்னாள் ஜார்கண்ட் சட்டமன்ற உறுப்பினர் சிபுசோரன், நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி, மேலும் ஐஏஎஸ் அதிகாரி மருத்துவர் பியூலா வெங்கடேசன் ஆகியோருக்கு சட்டமன்றத்தில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து வால்பாறை சட்டமன்ற பேரவை உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பேரவை நிகழ்ச்சியில் ஒத்திவைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 15ம் தேதி (நாளை) 20252026ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை பேரவைக்கு அளிக்கப்படும். தொடர்ந்து மறுநாள் விவாதம் நடைபெறும். 17ம் தேதி (வெள்ளி) மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலுரை மற்றும் வாகெடுப்பு நடைபெறும். 15, 16, 17ம் தேதி ஆகிய மூன்று நாட்களும், கூட்டம் தொடங்கியதும் கேள்வி-நேரம் இடம்பெறும்.

Advertisement

Related News