தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க செல்ல தவெக தலைவர் விஜய் போட்ட 5 கண்டிஷன்கள்

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க செல்ல தவெக தலைவர் விஜய் டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் 5 கண்டிஷன்கள் விடுத்துள்ளார்.

Advertisement

திருச்சி ஏர்போர்ட் முதல் கரூர் வரை, மீண்டும் ஏர்போர்ட் திரும்பும் வரை மொபைல் பேட்ரோல் வசதி வேண்டும். ஆங்காங்கு போலீஸ் செக் பாயிண்ட்கள் அமைக்க வேண்டும். தங்கள் வாகனம் நெருக்கடியில் சிக்காமல் தொடர்ந்து பயணிக்கும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய வேண்டும். பொதுமக்களும் அருகில் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.

விமான நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். தேவையின்றி யாரும் வராமல் பார்த்து கொள்ள வேண்டும். கூட்டம் கூடாமல் தடுக்க வேண்டும். விமானத்தில் இருந்து தனது கான்வாய் வரை எளிதாக செல்லும் வகையில் விமான நிலைய அதிகாரிகள் உடன் இணைந்து போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு சென்று விஜய் பார்வையிடும் போது, ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தவெக தலைவருக்கான ஒய் பிரிவு பாதுகாப்பு, இதர பாதுகாப்பு வீரர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். சிறிதளவும் கூட்டம் கூடாத வகையில் நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் செல்லும் போது ஒருவழிப் பாதை மட்டும் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் கலந்து கொள்வோர் அனைவரும் போலீசார் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்க வேண்டும். இந்த சந்திப்பில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் கட்சி சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும். அதன் அடிப்படையில் சோதனைகள் செய்யப்பட வேண்டும்.

விஜய் வருகை புரியும் இடத்தில் மீடியாவிற்கு அனுமதி அளிக்கக் கூடாது.

தவெக  தலைவரின் பயணத்திட்டத்தின் படி, திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்குகிறார். அங்கிருந்து கரூருக்கு புறப்பட்டு செல்கிறார். கரூரில் தனியாக சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். மீண்டும் விமான நிலையம் வந்து, அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டு செல்வார். கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் உடன் ஆலோசனை நடத்திய பின்னர், விஜய் செல்லும் தேதி, நேரம், இடம், கால அவகாசம் ஆகியவை குறித்த விரிவான விவரங்கள் தங்களிடம் பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் வருகை புரியும் இடத்தில் மீடியாவிற்கு அனுமதி அளிக்கக் கூடாது. தவெக தலைவரின் பயணத் திட்டத்தின் படி, திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்குகிறார். அங்கிருந்து கரூருக்கு புறப்பட்டு செல்கிறார். கரூரில் தனியாக சந்திப்பு; மீண்டும் விமான நிலையம் வந்து சென்னைக்கு புறப்பட்டு செல்வார்.

Advertisement

Related News