கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய த.வெ.க. வழக்கில் அக்.13ல் தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்..!!
டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய த.வெ.க. வழக்கில் உச்சநீதிமன்றம் திங்களன்று தீர்ப்பளிக்கிறது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி த.வெ.க. உள்ளிட்டோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எஸ்.ஐ.டி. விசாரணையை எதிர்த்து தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்தார். சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை பாஜக நிர்வாகி ஜி.எஸ்.மணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் விசாரணைக்கு வருகிறது. திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, அஞ்சாரியா அமர்வு தீர்ப்பளிக்கிறது.
Advertisement
Advertisement