கரூர் மாவட்டம் சிங்கம்பட்டியில் 500-க்கும் மேற்பட்டோரிடம் பணம் இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி மோசடி
கரூர்: கரூர் மாவட்டம் சிங்கம்பட்டியில் 500-க்கும் மேற்பட்டோரிடம் பணம் இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். போலீ சாமியாரை வைத்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கரூர் ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.3 லட்சமாக திருப்பித் தருவதாகக் கூறி 500-க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. பண மோசடி செய்தவர்கள் மீது 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Advertisement
Advertisement