கரூரில் செப்டம்பர் 17ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு மடல்..!!
Advertisement
சென்னை: கரூரில் செப்டம்பர் 17ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். பெரியார், அண்ணா, கலைஞர் புகழ் நிலைக்கட்டும், திமுகவின் வெற்றி சரித்திரம் தொடரட்டும். கொள்கையில்லா கூட்டத்தைச் சேர்த்து, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல திமுக. கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல திமுக. நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம்; கூட்டம் முடிந்து லட்சிய வீரர்களாகப் புறப்படுவோம். 7வது முறையாக திமுக ஆட்சி மலர்ந்திட கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா வெற்றிப்பாதையாக அமையட்டும் என தெரிவித்தார்.
Advertisement