கரூர் அருகே சட்டவிரோத குவாரி குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு.!!
மதுரை: கரூர் அருகே ஈசநத்தத்தில் சட்டவிரோத குவாரி குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஈசநத்தம் பகுதியில் விதிகளை மீறி செயல்படும் கல் குவாரிக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஈசநத்தம் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் கற்கள் வெட்டி எடுக்கும் குவாரி உரிமம் பெற்றுள்ளார். ஒரு இடத்துக்கு அனுமதி பெற்று சுற்றியுள்ள இடங்களிலும் சேர்த்து குவாரி-கிரஷர் யூனிட் அமைத்துள்ளார்.
விதிகளுக்கு எதிராக அனுமதி பெற்ற இடத்தில், அனுமதியின்றி எம்.சாண்ட் யூனிட் செயல்படுகிறது. குவாரியில் இருந்து வரும் மாசு காற்றில் கலந்து அருகில் உள்ள விவசாய நிலம், நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் விதிகளை மீறி செயல்படும் சட்டவிரோத குவாரி குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவிட்ட நிலையில்கனிமவளத்துறை இயக்குநரும் நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.