கரூர் அருகே நிதி நிறுவன உரிமையாளர் சடலமாக மீட்பு..!!
12:15 PM Aug 11, 2025 IST
கரூர்: வாங்கல் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் நிதி நிறுவன உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று வெளியில் சென்ற நிலையில் வீடு திரும்பாத நிதிநிறுவன உரிமையார் சுப்பிரமணி சடலமாக மீட்கப்பட்டார். தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.