கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஒன்றிய அமைச்சர்கள் ஆய்வு
கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரத்தில் ஒன்றிய அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். நேற்று முன்தினம் கரூரில் த.வெ.க. சார்பில் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இந்த பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் மூச்சு திணறல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Advertisement
அப்போது அங்கு பிரசாரத்தில் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் காலணிகள் கிடந்ததையும் பார்வையிட்டனர். பின்னர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அங்கு நெரிசலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நிர்மலா சீதாராமன் நலம் விசாரித்தார்.
Advertisement