உயிரிழந்த 39 பேரில் ஒரு பெண்ணின் அடையாளம் மட்டும் தெரியவில்லை: கரூரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பேட்டி
கரூர்: உயிரிழந்த 39 பேரில் ஒரு பெண்ணின் அடையாளம் மட்டும் தெரியவில்லை. அவரின் முகவரியைக் கண்டறியும் பணி நடக்கிறது என கரூரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய், வாரம்தோறும் சனிக்கிழமையன்று பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார். முதல் கட்டமாக திருச்சி, அரியலூரில் பிரசாரத்தை தொடங்கிய அவர்,2-ம் கட்டமாக நாகைமற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். அந்த வரிசையில் 3-வது கட்டபிரசாரத்தை நாமக்கல்லில் நேற்று தொடங்கினார். அதனைத்தொடர்ந்து அங்கு பிரசாரத்தை முடித்துக்கொண்டு கரூர் புறப்பட்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று பகல் 12 மணியளவில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரை காண நேற்று காலை முதலே அந்த கட்சியின் தொண்டர்கள் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர்.
இதனையடுத்து நடந்த கூட்டநெரிசலின் காரணமாக ஏராளமானவர்கள் மயங்கி விழுந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் சுமார் 6 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் ஆவார்கள். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரூரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
14 உடல்கள் உடற்கூராய்வுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு. மொத்தம் 111 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். மற்றவர்கள் நலமுடன் இருக்கின்றனர்.