கரூர் கூட்ட நெரிசலில் 40 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களை கண்காணிக்க காவல்துறை முடிவு
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் 40 பேர் பலியான அசம்பாவிதம் சம்பந்தமாக சமூகவளைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டவர்களின் வீடியோவை காவல்துறையினர் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் பிரச்சாரத்தின் போது அங்கு நடந்தவைகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் வருகிறது.
Advertisement
இந்த நிலையில் தேவையில்லாத வீண் வதந்திகளையும், கருத்துகளையும் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வீடியோக்களையும் கருத்துகளையும் பதிவிட்டவர்களை காவல்துறையினர் ஆய்வு செய்துவருகின்றனர். சமூக வலைதள கருத்துகளை ஆய்வு செய்யும் பணிகளை சைபர்கிரைம் போலீசார் மேற்கொண்டுவருவதாகவும், தேவைபட்டால் வீடியோ மற்றும் கருத்துகளை பதிவிட்டவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement