தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முகமூடி அணிந்து ஏமாற்றும் எடப்பாடியின் முகத்திரையை கிழிப்போம் - கருணாஸ்

சென்னை : முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக உள்கட்சியை பஞ்சாயத்திற்குத்தான் எடப்பாடி டெல்லி சென்றார் என்பது நாட்டு மக்கள் அனைவர்க்கும் தெரியும். ஆனால் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வைக்க சென்றதாக வெளியில் அண்டப்புளுகை அவிழ்த்துவிடுகிறார். தனது சுயநல அரசியலுக்காக பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பயன்படுத்துவதை மானமுள்ள தேவர் சமூகம் பொறுத்துக்கொள்ளாது.

Advertisement

அமித்ஷாவை சந்தித்துவிட்டு சென்றதை அதிகாரபூர்வமாக அறிவித்தால் தனது உள்கட்சி விவகாரத்தின் முகமூடி கழண்டுவிடும். அதனால்தானே முகத்தை மூடிகொள்கிறார் பழனிச்சாமி! எடப்பாடியின் தில்லுமுல்லு சந்தர்ப்பவாத துரோக அரசியலுக்கு தேவர் சமுதாயத்தை காக்கா பிடிக்க இந்தச் சந்திப்பை தேவருக்காக என்று மடைமாற்றுகிறார் எடப்பாடி. உண்மை உலகத்திற்கு தெரியும். எடப்பாடி தேவர் சமுதாயத்திற்கு இழைத்த துரோகங்களை தேவர் சமுதாயம் மறந்துவிடவில்லை. முகமூடி மாட்டிக் கொண்டு திரியும் எடப்பாடியின் முகத்திரையை கிழிப்போம்!"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News