சென்னை குமரன் நகரில் தடை செய்யப்பட்ட பிட் புல் நாய் கடித்து கருணாகரன் என்பவர் உயிரிழப்பு
சென்னை: ஜாஃபர்கான் பேட்டையை சேர்ந்த கருணாகரன் என்பவரை பிட் புல் என்ற உயர் ரக நாய் கடித்து அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியம் 3 மணி அளவில் தனது வீட்டின் பகுதியில் அமர்ந்து கொண்டிருக்கும் பொழுது பூங்கொடி என்பவர் தனது பிட் புல் நாயை அழைத்து கொண்டு செல்லும்பொழுது திடீரென அந்த நாய் பாய்ந்து கருணாகரன் என்பவரை கடித்திருக்கிறது.
அவரை தொடை பகுதியிலும் பல்வேறு பகுதியிலும் கடித்த காரணத்தினால் சம்பவ இடத்தில் அவர் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். இதை கட்டுப்படுத்த அந்த நாயின் உரிமையாளர் பூங்குடியும் முயற்சித்தபோது நாய் மிகவும் வெறியாக இருந்த காரணத்தினால் உரிமையாளரையும் கடித்து பிடிங்கியிருக்கிறது. இதனால் இருவரும் இந்த நாய் கடியினால் பயகரமாக பாதிக்கப்பட்டார்கள்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் இருவரையுமே அருகில் இருக்கும் கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்கள். குறிப்பாக கருணாகரனை பிட் புல் என்ற உயர்ரக நாய் மிகவும் கடுமையாக கடித்த காரணத்தினாலும் அவர் மிகவும் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது உயிர் இழந்திருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெருவிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து வீட்டு வளர்ப்பு நாய்களை இது போன்று வளர்க்கும் பொழுது அவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சியால் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே சிறுமிகளையும் பல்வேறு வளர்ப்பு நாய்கள் கடித்து அதற்கு உண்டான சம்பவங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடந்திருக்கிறது.
அதற்கு சென்னை மாநகராட்சி பல்வேறு விதமாக கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அதையும் மீறி செயல்பட்டால் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையும் தற்போது பூங்கொடி என்பவருடைய பிட் புல் நாய் கடித்து ஒருவர் உயிர் இழந்த சம்பவம் சென்னையில் தற்போது மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.
ஏற்கனவே உச்சநீதிமன்றம் வரை தெருநாய்களை எல்லாம் கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழலில் தற்போது வளர்ப்பு நாய்களாலும் பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிற காரணத்தினால் இதில் கடுமையாக நடவடிக்கை எடுக்க படவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்துவருகிறது.