பெங்களூரு: கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என கமல் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். "கமல்ஹாசன் கடிதம் திருப்தியாக உள்ளது. கமல் கன்னட மொழியை மதிக்கிறார் என்பதை ஏற்கிறோம். ஆனால் அதில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லையே. கன்னட மொழி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ? . மன்னிப்பு கேட்கச் சொன்னால் ஏன் சுற்றிவளைத்து பேசுகிறீர்கள்?" என கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.