தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கர்நாடகத்துடன் ஓசூரை இணைக்காவிட்டால்... வாட்டாள் நாகராஜ் புது போராட்டம்

ஓசூர்: கர்நாடகாவுடன் ஓசூரை இணைக்காவிட்டால் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க அனுமதிக்க மாட்டோம் என மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நடந்த மறியல் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார். பெங்களூருவிலிருந்து சந்தாபுரத்திற்கு அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் வழித்தடத்தை அத்திப்பள்ளி வழியாக தமிழகத்தின் ஓசூர் வரையிலும் நீட்டிக்க கர்நாடகா அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. தமிழக அரசும் இத்திட்டத்தை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளது.
Advertisement

இந்நிலையில், பெங்களூருவிலிருந்து தமிழகத்திற்கு மெட்ரோ ரயிலை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து ஓசூர் அருகே கர்நாடகா-தமிழக எல்லையான அத்திப்பள்ளி - ஜூஜூவாடி இடையே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கன்னட சலுவளி, கன்னட ரக்சன வேதிகே ஆகிய அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர். ஓசூரிலிருந்து கர்நாடகா சென்ற வாகனங்களை தடுத்து மறியலில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது வாட்டாள் நாகராஜ் அளித்த பேட்டியில், ‘ஓசூரை கர்நாடக மாநிலத்துடன் இணைக்க வேண்டும். காமராஜர் ஆட்சி காலத்தில்தான் ஊட்டி, ஓசூர் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. ஓசூரை இணைத்த பிறகு தான் மெட்ரோ திட்டம் ஓசூர் வரை நீட்டிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் ஒரு அங்குலம் கூட நீட்டிக்க அனுமதிக்க மாட்டோம். மேகதாதுவில் அணைக்கட்டும் விவகாரத்தில் ஒன்றிய அரசு அனுமதியளிக்காவிட்டாலும், மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டாலும் மக்களை திரட்டி நாங்களே கட்டுமான பணியில் ஈடுபடுவோம்’ என்றார்.

Advertisement

Related News