கர்நாடக சிஐடி கேட்ட ஆதாரங்களை எப்போது வழங்குவீர்கள்: தலைமை தேர்தல் ஆணையருக்கு ராகுல் காந்தி கேள்வி
புதுடெல்லி: மக்கவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், வாக்கு திருட்டு பிரச்னையை நான் எழுப்பிய பிறகே புதிதாக வாக்காளர்களை சேர்ப்பதற்கும், வாக்காளர்களை நீக்குவதற்கும், இ-சைன் என்ற அம்சத்தை தேர்தல் ஆணையம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஞானேஸ்வர்ஜி, நாங்கள் திருட்டை கண்டுபிடித்தோம், அதன் பிறகுதான் பூட்டை போடுவதற்கு உங்களுக்கு ஞாபகம் வந்தது. இப்போது நாங்கள் திருடர்களையும் பிடிப்போம். சரி,நீங்க எப்போது கர்நாடக சிஐடியிடம் ஆதாரங்களை கொடுக்க போகிறீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளார்.
Advertisement
Advertisement