கர்நாடகாவில் இன்று பஸ் ஸ்டிரைக்
பெங்களூரு: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அமல்படுத்த வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் ஏற்கனவே அரசுக்கு நோட்டீஸ் அளித்தது. இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் முதல்வர் சித்தராமையா பேச்சுவார்த்தை நடத்தினார். இது தோல்வியில் முடிந்ததையடுத்து, இன்று திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடைபெறும் என்று ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு செல்லும் அரசு பஸ் சேவை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.