கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு: கறம்பக்குடியில் வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம்
இந்தநிலையில் தான் கறம்பக்குடி பகுதியில் 25 ஆண்டு காலமாக செயல்பட்டு வந்த தீயணைப்பு நிலையம், இடவசதிக்காக அருகே உள்ள 7 கிலோ மீட்டர் தொலைவில் நிலவராயன்பட்டு கிராமத்துக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக கறம்பக்குடியில் செயல்படும் தீயணைப்பு நிலையம் கந்தர்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது. தற்போது பல்லவராயன் பட்டி கிராமத்துக்கு மாற்றும்போது தீயணைப்பு நிலையம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு வரும்.
மேலும் 20,000க்கு மேற்பட்ட பொதுமக்கள் நிறைந்த பகுதியாக இருக்க கூடிய கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதியில் இருக்கக்கூடிய தீயணைப்பு நிலையம் மாற்றுப்படுவதுனால், அசம்பாவிதம் ஏற்படும் போது தீயணைப்பு வாகனம் வருவதற்கு தாமதம் ஏற்படும். இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்தை இடம் மற்ற செய்யக்கூடிய முறையை கைவிட வேண்டும் என்றும், இடமாற்றம் செய்ய கறம்பக்குடி பகுதியிலேயே வேறு ஒரு இடத்தை தேர்வு செய்து அந்த இடத்துல தீயணைப்பு நிலையம் கொண்டு வர வேண்டும் என்றும் கூறி தொடர்ச்சியாக கறம்பக்குடி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தான் கடையடைப்பு போராட்டங்கள் அறிவித்த கறம்பக்குடி வர்த்தகர் வணிக சங்கத்தினர், கறம்பக்குடி பகுதியில் இருக்கும் 900க்கு மேட்பட்ட கடைகள் இன்று ஒருநாள் முழுவதும் முழுமையாக அடைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மேலும் 10 மணிக்கு பிறகு அனைத்து கட்சிகளுடன் இணைந்து வர்த்தக சங்கத்தினரும், பொதுமக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்கள். அவர்கள் கோரிக்கையானது, கறம்பக்குடி இருக்க தீயணைப்பு நிலையத்தை இடமாற்ற செய்யக்கூடாது. அப்படியே இடமாற்றம் செய்தாலும் கறம்பக்குடி பகுதியிலேயே இடமாற்றம் செய்ய வேண்டும். இந்த போராட்டத்தால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.