தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மறைமலை நகர் அருகே பரபரப்பு விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுப்பு

செங்கல்பட்டு: மறைமலைநகர் அருகே விடுதியில் தங்கி படித்து வந்த 9ம் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது, சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் உடலை வாங்க மறுத்த நிலையில் நோட்டு புத்தகம் மற்றும் டைரியில் உள்ள கையெழுத்து மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததின்பேரில் உறவினர்கள் உடலை பெற்று கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisement

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அடுத்த கோபாலபுரம் பகுதியில் உதவும் கரங்கள் என்ற பெயரில் பள்ளி மாணவிகள் தங்கும் விடுதி இயங்கி வருகிறது. இங்கு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள் 1ம் வகுப்பு முதல் முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் இந்த விடுதியில் தங்கி அருகில் உள்ள மெல்ரோசாபுரம் சிஎஸ்ஐ பள்ளியில் பயின்று வருகின்றனர். இங்கு 31 மாணவிகள் தங்கியுள்ளனர்.

இந்நிலையில். இந்த விடுதியில் கடலூர் மாவட்டம் பன்ரூட்டி பகுதியை சேர்ந்த ராஜா மற்றும் ஆனந்தாயி என்பவரது 14 வயது மகள் தங்கி சிஎஸ்ஐ பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த மாணவியின் தந்தை ராஜா மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த மாணவிக்கு ஒரு தம்பியும் ஒரு அண்ணனும் உள்ளனர். மாணவி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்றபோது எனக்கு விடுதியில் தங்கி படிக்க பிடிக்கவில்லை.

அதனால் வரும் ஆண்டுகளில் நான் நமது ஊரிலேயே பன்ரூட்டியிலேயே படிக்கிறேன் என தாயிடம் சொன்னதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, நேற்று மதியம் சக மாணவிகள் சாப்பிட சென்றபோது இந்த மாணவியை மட்டும் காணவில்லை. மாணவியை சக மாணவிகள் மற்றும் விடுதி காப்பாளர்கள் விடுதியின் உள்ளே அனைத்து இடங்களிலும் தேடியுள்ளனர். அப்போது, குளியலறையில் அந்த மாணவி தூக்கில் தொங்கியுள்ளார்.

அதனை கண்ட விடுதி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் சொல்லாமல், மாணவியின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்காமல் நேரடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாணவியை கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதன் பின் மறைமலைநகர் காவல்நிலையம் மற்றும் மாணவியின் பெற்றோரிடம் தகவல் கொடுத்துள்ளனர். மேலும், மாணவியின் அறையில் ஒரு டைரி கிடைத்துள்ளது. அந்த டைரியில் மாணவி தனது சாவிற்கு விடுதி நிர்வாகமோ நான் பயிலும் பள்ளி நிர்வாகமோ காரணமில்லை.

எங்கப்பா என்னை விடவில்லை என்னையும் அவரோடு அழைக்கிறார். அதனால், சாகப்போகிறேன். என்னுடைய சாவிற்கு யாருக்கும் காரணமில்லை என இறந்து போன மாணவி எழுதிய டைரி கிடைத்துள்ளதாக விடுதி நிர்வாகம் கூறுகிறது. கடந்த அந்த கடிதம் 24ம்தேதி எழுதியது. மாணவியின் உறவினர்கள் இந்த கடிதம் இறந்தவரின் கையெழுத்து அல்ல வேறொரு மாணவியை விட்டு எழுதச்சொல்லி செட்டப் செய்துள்ளனர் என்றும், விடுதியில் ஏதோ நடந்திருக்கிறது.

விடுதி நிர்வாகம் எங்களிடம் மறைக்கிறது என்றும் கடந்த நான்கைந்து நாளாக மாணவியின் அம்மா ஆனந்தாயி விடுதி நிர்வாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு இறந்து போன மாணவியிடம் பேசுவதற்காக கேட்டுள்ளனர். இதுவரை பேச அனுமதிக்கவில்லை என கூறியதோடு, மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். டைரியில் எழுதியதையும் பள்ளி நோட்புக்கில் எழுதியதையும் சோதனை செய்ய வேண்டும். இல்லையென்றால் சடலத்தை வாங்க கையெழுத்து போடமாட்டோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து மறைமலைநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரகலாதன் அவர்களிடம் சமரசம் பேசி டைரியில் உள்ள கடிதத்தையும், மாணவியின் நோட்புக்கில் உள்ள எழுத்தையும் ஆய்வு மேற்கொண்டு, அந்த டைரியில் எழுதிய கடிதம் இறந்து போன மாணவியின் கையெழுத்து இல்லையென நிரூபணமால் அந்த விடுதியை சீல் வைத்து மாணவியின் தற்கொலைக்கு காரணமான நபர் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின்பேரில் சடலத்தை பெற்றுக்கொள்வதாக கையொப்பமிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News