தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரமடை அருகே யானைகளை விரட்ட செயற்கை தொழில்நுட்பம்: விளைநிலங்களை காக்க போராடி வந்த விவசாயிகள் நிம்மதி

கோயம்பத்தூர்: வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் விலங்குகள் நுழைவதால் மனித உயிரிழப்பும், விவசாயம் பாதிப்படைவதும் நடந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் முயற்சியாக யானைகள் புகுவதை தடுப்பதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சோதனை முறையில் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளது. மேட்டுப்பாளையம் காரமடை பகுதிகளை ஒட்டிய மேற்குதொடர்ச்சி மலை அடிவாரங்களில் யானைகள் நடமாட்டம் அதிகம். பாடுபட்டு வளர்த்த வாழை, தென்னை மற்றும் பயிர்களை பாழ்படுத்தி செல்லும் யானைகளால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Advertisement

யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க போராடிவந்த இருளர்பதி மலை கிராமத்திற்கு கிடைத்துள்ள புது யுக்தி தான் செயற்கை தொழில்நுட்பம். யானைகள் நுழையும் இடத்தில் கண்காணிப்பு கேமராவும், ஒலிபெருக்கியும் பொருத்தப்பட்டு கேமராபதிவுகளை வனத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பும் வகையில் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒலிப்பதிவு கருவியின் பார்வை எல்லைக்குள் வந்தால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள. மனிதர்கள் எழுப்பும் ஒலி மற்றும் ஆம்புலன்ஸ், ஜேசிபி எந்திர ஓசை உள்ளிட்டவை வெளிப்படுகின்றன.

பரிசோதனை முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யானைகளை விரட்டுவது கெம்மாரம் பாளையம் ஊராட்சியில் சாத்தியமாகியுள்ளது. யானைகளின் வருகையை அறியவும், தடுப்பதற்காக ஒருங்கிணைந்து செலல்படவும் உதவுகிறது இந்த நவீன யுக்தி. யானைகளின் ஊடுருவலை தடுக்க வனத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அவற்றின் தொல்லைக்கு முடிவுகட்ட முடியாமலே உள்ளது. இந்நிலையில் அரைகிலோமீட்டர் தூரத்திற்கு யானைகளை தடுத்து விரட்ட முடிவதால் இருளர்பதி மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்த செயற்கை நுண்ணறிவு முறையை அருகில் உள்ள கிராமங்களிலும் பயன்படுத்துவது குறித்து வனத்துறையுடன் இணைந்து ஆலோசித்து வருகிறது கெம்மாரம் பாளையம் ஊராட்சி நிலையம்

Advertisement

Related News