ஒன்றிய அரசைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் 11வது நாளாக ஸ்டிரைக்
Advertisement
இந்த தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 17ம் தேதி மீனவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். மீனவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக காரைக்கால் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டமும் நடந்தது.
இந்நிலையில் இன்று (20ம் தேதி) மீனவர்கள் 11வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் துறைமுகம், கடற்கரையோரங்களில் 500 விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்த போராட்டத்தால் இதுவரை ரூ.18.50 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5,000 மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கியுள்ளனர்.
Advertisement