கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி நடந்த முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
05:27 PM Jul 10, 2024 IST
Share
மதுரை: மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி நடந்த முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை முடியும் வரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும் என சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்துள்ளது.