கன்னியாகுமரி அருகே பிறந்து 42 நாட்களே ஆன குழந்தையை கொன்ற தாய் கைது..!!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பிறந்து 42 நாட்களே ஆன குழந்தையை கொன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் சுவாச குழாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து கொலை செய்ததாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். பெண் குழந்தை பிறந்ததால் மாமியார் தொடர்ந்து திட்டி வந்ததால் கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். குழந்தையை கொன்ற பெனிட்டா ஜெய அன்னாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காத்திக் (21), பெனிட்டா ஜெய அன்னா (20) இருவரும் ஒரு வருடத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். குழந்தை பிறந்ததும் தன்னிடம் கணவர் அன்பு காட்டவில்லை எனவும் பெனிட்டா ஜெய அன்னா வாக்குமூலம் அளித்தார்.
Advertisement
Advertisement