தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கன்னியாகுமரியில் விவேகானந்தர் சிலைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் செல்லும் கண்ணாடி பாலம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சென்னை: கன்னியாகுமரியில் விவேகானந்தர் சிலைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் செல்லும் கண்ணாடி பாலம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதில், கன்னியாகுமரியில் விவேகானந்தர் சிலைக்கும் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கும் செல்லும் கண்ணாடி பாலம் கட்டப்பட்ட பிறகு சுமார் 17 லட்சம் பொது மக்கள் பார்வையிட்டுள்ளனர். அவ்வப்போது முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.16.8.2025 அன்று பராமரிப்புப் பணிகள் மேற்கொண்ட போது, 8 மீட்டர் உயரத்தில் ஆர்ச்சில் உள்ள போல்டுகளை சரி செய்யும் பொழுது சுத்தியல் கை தவறி விழுந்து விட்டது.

Advertisement

அதன் விளைவாக கண்ணாடியின் மேல் பகுதியில் மட்டும் மெல்லிய விரிசல் ஏற்பட்டது. உடனடியாக சேதமடைந்த இடத்தில் மட்டும் பாதசாரிகள் பாதுகாப்பு கருதி தடுப்பாண்கள் அமைக்கப்பட்டது. விரிசல் ஏற்பட்ட கண்ணாடியை 2.00 மீட்டர் நீளமும், 2.40 மீட்டர் அகலமும், அதே வடிவமைபில் அதே தரத்துடன் கம்பி இழையிலான கண்ணாடி 08.09.25 அன்று பொறுத்தப்பட்டது. மேலும், போதுமான எடையினைக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தாங்குத்திறன் உறுதி செய்யப்பட்டதில் கண்ணாடி பாதுகாப்பாக உள்ளது.

77 மீட்டர் நீளமுடைய கண்ணாடி பாலத்தில், ஒரே நேரத்தில், 650 நபர்கள் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்ததாரரின் பராமரிப்பு காலம் 10 ஆண்டு காலம் என்பதால், சேதமடைந்த கண்ணாடியினை ஒப்பந்ததாரரின் செலவிலேயே சரி செய்யப்பட்டுவிட்டது.

தற்போது, அனைத்து பார்வையாளர்களும், கண்ணாடி பாலத்தைப் பார்வையிட்டு வருகின்றனர் என்று செய்தியாளர்கள் சந்திப்பில், அமைச்சர் தெரிவித்துள்ளார்கள். செய்தியாளர்கள் சந்திப்பின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசுச் செயலாளர் மருத்துவர் இரா.செல்வராஜ் இ.ஆ.ப., நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் R.செல்லத்துரை, நெடுஞ்சாலைத்துறை சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் இரா.சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Related News